தபால் மூல வாக்களிப்பு குறித்து அடுத்த வாரம் முடிவெடுக்கப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழு.......

 தபால் மூல வாக்களிப்பு குறித்து அடுத்த வாரம் முடிவெடுக்கப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழு.......

தபால் மூல வாக்களிப்புக்கு வாக்குச் சீட்டுகள் இந்த வார இறுதிக்குள் கிடைக்கப்பெறாவிட்டால், தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் அடுத்த வாரத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

தபால் மூல வாக்களிப்பு திகதியை மாற்றுவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார். எவ்வாறாயினும், வாக்குச் சீட்டுகள் கிடைக்கப்பெறாத பட்சத்தில் தபால் மூல வாக்களிப்பு திகதி தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் அடுத்த சில தினங்களில் கலந்துரையாடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும், வாக்குச் சீட்டு அச்சிடுவதற்கு அரசு அச்சகம் இதுவரை பணம் தருமாறு கோரிக்கை விடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments