மட்டக்களப்பு மண்ணிற்கு பெருமை தேடிக் கொடுத்துள்ளார் ராஜா.......

 மட்டக்களப்பு மண்ணிற்கு பெருமை தேடிக் கொடுத்துள்ளார் ராஜா.......

2022ம் ஆண்டுக்கான பினகல்ஸ் விருது (Srilanka Pinnacles Awards-2022) வழங்கும் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த ஒரே தமிழரான பேரின்பராஜா சடாற்சரராஜா அவர்கள் இச் சாதனையாளர் விருதை பெற்று மட்டக்களப்பு மண்ணிற்கு பெருமை தேடிக் கொடுத்துள்ளார்.

ஆண்டு தோறும் இலங்கையில் சிறந்த சேவையாற்றிய சிறந்த சமூகசேவையாளர்கள், சிறந்த தொழில் முயற்சியாளர்கள், சிறந்த ஊடகவியளார்கள், சிறந்த வியாபார நிறுவனங்களை இலங்கை MUGP international Organisation நிறுவனத்தால் ஒழுங்கமைத்து பினகல்ஸ்  விருது வழங்கி கௌரவித்து வருகின்றது. இதில் தம் அர்பணிப்பான சேவையை எந்தவித எதிர்பார்ப்புக்களும் இன்றி வழங்கியவர்கள் கௌரவிக்கப்பட்டனர். இச்சாதனையாளர்களில் நூற்றுக்கணக்கானோர் 2022ன் சாதனையாளர்களாக தெரிவு செய்யப்பட்ட போதிலும் இரண்டு பேர் மாத்திரமே தமிழர்களாக சாதனை படைத்து வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் நம் மண் மைந்தன் பேரின்பராஜா சடாட்சரராஜா அவர்களும் தெரிவாகி இருந்தது எமக்கு பெருமை சேர்கின்றது.



மட்டக்களப்பை பிறப்பிடமாக கொண்ட பேரின்பராஜா சடாற்சரராஜா 2021ம் ஆண்டு இலங்கையின் இரண்டாவது உயரிய விருதான ஜனரஞ்சன கீர்த்தி ஸ்ரீ தேசமானிய விருதை இலங்கை பௌத்த சாசன மத்திய நிலையத்தின் ஊடாக பெற்றிருந்ததுடன், சுமார் 16 வருடங்களாக லயனஸ் கழகத்தில் இணைந்து செயற்படுகின்றார், இவர் தற்போது லயனஸ் கழகத்தின் கிழக்கு பிராந்தியத்திற்கான பிரதி ஆளுனர் சபையின் பொருளாளாராகவும், மட்டக்களப்பு சிறைச்சாலை நலன்புரிச்சங்கத்தின் உப தலைவராகவும் செயற்படுவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் தலைவராகவும், மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் பணிப்பாளர் சபையின் உறுப்பினராகவும் செயற்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இவருக்கான விருது 2023.01.09 ம் திகதி அன்று பத்தரமுல்லையில் அமைந்துள்ள இசுருபாய வோட்ட எச்சில் ( Hotel Waters Edge) வைத்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனனா அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.





Comments