சுயதொழில் கடனுதவி கிராம சக்தி மக்கள் சங்கத்திற்கான பயிற்சிப் பட்டறை ....

 சுயதொழில் கடனுதவி கிராம சக்தி மக்கள் சங்கத்திற்கான பயிற்சிப் பட்டறை ....

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் தியவட்டவான் கிராமத்தில் சுயதொழிலுக்கான கடனுதவி வழங்குவதற்கான முன்னாயத்தப் பயிற்சி பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம். எம்.ருவைத் தலைமையில் இன்று (03) இடம்பெற்றது.
நுண்நிதியைப் பெறுவதற்கு பொருத்தமானவர்களை அடையாளம் காணுதல் மற்றும் சுயதொழில் முயற்சியாளர்களை தொடர்ந்தும் தொழிலில் நிலைத்திருக்கச் செய்வதற்கு அவசியமான வழிகாட்டல்களை எவ்வாறு வழங்குதல் போன்ற விடயங்கள் தொடர்பாக தியவட்டவான் கிராம மக்கள் சக்தி சங்கத்திற்கு தெளிவூட்டப்பட்டது.
அத்துடன் சுயதொழில் முயற்சியாளர்களுக்கு வழங்கப்படும் கடனுதவியை எவ்வாறு வினைத்திறனாகப் பயன்படுத்தி, கடனை மீளச் செலுத்துதலை இலகுவாக மேற்கொள்ளும் வகையில் அறிவூட்டல்களும் வழங்கப்பட்டன.
இதன்போது பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் அறபாத் மற்றும் சுயதொழில் முயற்சியாளர் சங்கத்தின் அங்கத்தவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.




Comments