அல்பிரட் லியோ சவரிமுத்து தம்பையா......

 அல்பிரட் லியோ சவரிமுத்து தம்பையா......

Alfred Leo Saverimuthu Thambiayah அல்பிரட் லியோ சவரிமுத்து தம்பையா (1903 நவம்பர் 8) இலங்கையின் வடக்கே வேலனைதீவு தீவில் உள்ள கரம்பொன் என்ற இடத்தில் பிறந்தார்.
இவரது தந்தை ஊர்காவற்துறையில் கப்பல் உரிமையாளராக இருந்தார். ஊர்காவற்துறை, புனித அந்தோனியார் கல்லூரி, யாழ்ப்பாணம் புனித பேட்ரிக் கல்லூரி, கொழும்பு புனித பெனடிக்ட் கல்லூரி மற்றும் கொழும்பு புனித ஜோசப் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார்.
இவர் 21 வயதில் ஒலிம்பியா சினிமாவை குத்தகைக்கு எடுத்து தனது வணிக வாழ்க்கையை தொடங்கினார். பின்பு பிரபல வர்த்தகரான சேர் சித்தம்பலம் கார்டினருடன் சேர்ந்து சிலோன் தியேட்டர்ஸ் லிமிடெட் என்ற திரைப்பட விநியோக நிறுவனத்தை நிறுவினார்கள், பின்னர் கார்கில்ஸ் & மில்லர்ஸ் நிறுவனத்தை வாங்கி வர்த்தகத்தை விரிவாக்கினார்கள், பின்னர் 1936 ஆம் ஆண்டு ஹாரி மற்றும் ஜான் காஸ்மாஸிடமிருந்து சரக்கு படகு டிஸ்பாட்ச் கம்பெனி என்ற கப்பல் நிறுவனத்தை வாங்கினார்கள். .
கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே வணிகத்தின் பெரும் பகுதியைக் கட்டுப்படுத்தும் மிகப்பெரிய நிறுவனமாக இவர்களின் தொழில் சாம்ராஜ்யம் வளர்ந்தது.
1947 நாடாளுமன்றத் தேர்தலில் ஊர்காவற்துறையில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரோடு போட்டியிட்டு தோற்ற ஏ.வி.குலசிங்கம் இவரது வெற்றி செல்லாது என்று வழக்கு தொடர்ந்தார்
அரசுக்கு சொந்தமான கொழும்பு துறைமுக அதிகாரசபையுடன் அவரது சரக்கு கப்பல் அனுப்பும் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளதால், தம்பையா தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் என்று கூறி சட்டப்பூர்வ மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் இவரது வெற்றி செல்லாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்புக்கு எதிரான மேன்முறையீடுகளை தேர்தல் சட்டம் அனுமதிக்காததால் இவரின் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அவசர அவசரமாக 1948 ஆம் ஆண்டின் தேர்தல் மனு மேன்முறையீட்டுச் சட்டத்தை இயற்றியது.
இதன் பின் தம்பிஐயா மேல்முறையீடு செய்தார் . அதில் இவருக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்தது. அதாவது இவர் சார்ந்த ஐக்கிய தேசிய கட்சி இவருக்காக புதிய சட்டத்தை நிறைவேற்றி இவரது பதவியை காப்பாற்றியது.
1952 நாடாளுமன்றத் தேர்தலில் அல்பிறெட் தம்பையா அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வேட்பாளராக மீண்டும் களம் இறங்கி வெற்றி பெற்றார்.
தமிழ் காங்கிரசில் இருந்து வெற்றி பெற்ற அல்பிறெட் தம்பையா காங்கிரசை விட்டு மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியோடு சேர்ந்திருந்தார். ஆனால் 1956 இல் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் தனி சிங்கள சட்டத்தை ஆதரிக்க தொடங்கியதும் அதில் இருந்து நடேசபிள்ளை போன்றவர்களோடு வெளியேறினார்.
1956 மற்றும் மார்ச் 1960 நாடாளுமன்றத் தேர்தல்களில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பாக ஊர்க்காவல் துறை தொகுதியில் மீண்டும் தேர்தலில் நின்றார், ஆனால் இரண்டு தேர்தல்களிலும் தோல்வியடைந்தார்.
1958 இல் பண்டாரநாயக்க அரசினால் கொழும்பு துறைமுகம் தேசியமயமாக்கப்பட்ட போது அல்பிறெட் தம்பையாவின் நிறுவனம் பின்னடைவை சந்தித்தது.
1970 ஆம் ஆண்டளவில் ஹட்டன் நேஷனல் வங்கியில் பங்குகளை வாங்கிய இவர்களின் நிறுவனம் தொடர்ந்து கொள்ளுப்பிட்டியில் ஹோட்டல் ரேணுகாவை நிறுவினார்கள் கார்கில்ஸ் நிறுவனம், மெஜெஸ்டிக் தியேட்டர்கள் போன்ற பல நிறுவனங்களை கொண்ட இவர்களின் வர்த்தக சாம்ராஜ்ஜியம் தற்போது பிரமாண்டமாக வளர்ந்துள்ளது
இந்நிறுவனம் ரேணுகா ஹோல்டிங்ஸ் பிஎல்சி என அறியப்படுகிறது அல்பிரட் தம்பையாவின் மகள் இந்துமதி ரேணுகா ராஜியா நிறுவனத்தின் தலைவியாகவும், அவரது பேரன் ஷமீந்திர வத்சலன் ராஜியா நிர்வாக இயக்குனராகவும் உள்ளனர்




Comments