இலங்கை தாதியருக்கு மகிழ்ச்சியான செய்தி.....
இந்த ஆண்டு 2,000 இலங்கை தாதியருக்கு இஸ்ரேல் வேலைவாய்ப்பை வழங்க இணங்கியுள்ளது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இஸ்ரேலின் விசேட பிரதிநிதிகள் குழு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவை சந்தித்தபோது, இதற்கான உறுதிப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
அதேநேரம், இஸ்ரேலுக்கான தாதிய தொழில் வாய்ப்பை வழங்குவதற்காக, இடைத்தரகர்கள் பணம் கோரினால், அது குறித்த தகவல்களை தமக்கு வழங்குமாறு, அந்த நாட்டின் குடித்தொகை மற்றும் புலம்பெயர்வுக்கான அமைப்பின் பிரதிநிதிகள் கோரியுள்ளனர்.
Comments
Post a Comment