இறக்குமதி செய்யப்படும் முட்டை பேக்கரி துறையினருக்கு மாத்திரம்.........
நாட்டில் ஏற்பட்டுள்ள முட்டைத் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு தற்காலிகமாக முட்டை இறக்குமதிக்கு, கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.
விவசாய அமைச்சு, அறிக்கை ஒன்றின் மூலம் இதனை அறிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் முட்டைகள், பேக்கரி துறையினருக்கு மாத்திரம் வழங்கப்படும். பொது நுகர்வுக்காக, வர்த்தக நிலையங்களில் இறக்குமதி செய்யப்படும் முட்டையை விநியோகிக்க அனுமதி வழங்கப்படக் கூடாது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment