இயக்குனர் கே.விஸ்வநாத் காலமானார்........
தமிழ், தெலுங்கு திரை உலகின் பழம்பெரும் இயக்குனருமான கே.விஸ்வநாத் காலமானார். இதனை அடுத்து அவருக்கு திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழில் 'சங்கராபரணம்' 'சலங்கை ஒலி' 'சிப்பிக்குள் முத்து' உள்பட ஒரு சில திரைப்படங்களை இயக்குனர் கே.விஸ்வநாத் இயக்கியுள்ளார். அதே போல் தெலுங்கில் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனராக மட்டுமின்றி 'குருதிப்புனல்' 'முகவரி' 'பாசவலை' 'ராஜபாட்டை' 'சிங்கம் 2' 'யாரடி நீ மோகினி' 'உத்தம வில்லன்' 'லிங்கா' உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் ஏராளமான தெலுங்கு படங்களிலும் இவர் நடித்தும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 92 வயதான கே.விஸ்வநாத் இன்று (03) காலமானார். இதனை அடுத்து அவருக்கு திரையுலகினர் அவருடைய மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்து வருகின்றனர்.
கடந்த 1992 ஆம் ஆண்டு கே.விஸ்வநாத் அவர்களின் திரையுலக சேவையை பாராட்டி மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கியது. மேலும் இவரது திரைப்படங்கள் ஆறு முறை தேசிய விருது பெற்றுள்ளது என்பது பல சர்வதேச விருதுகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கே.விஸ்வநாத் அவர்களின் மறைவு இந்திய திரை உலகிற்கு மிகப்பெரிய இழப்பு என திரை உலகினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்
பழம்பெரும் இயக்குனர் கே.விஸ்வநாத் அவர்களின் மறைவு குறித்து கமலஹாசன் தனது சமூக வலைதளத்தில், 'வாழ்க்கையின் நிலை ஏற்ற தன்மையையும், கலையின் அழியா தன்மையையும் நன்கு அறிந்தவராக இருந்தார் கலா தபஸ்ரீ விஸ்வநாத். அவரது படைப்புகள் காலம் கடந்து கொண்டாடப்படும். வாழ்க அவரது கலை, நான் உங்கள் தீவிர ரசிகன்' என்று பதிவு செய்துள்ளார்..
Comments
Post a Comment