இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள பூகம்ப எச்சரிக்கை...... Battieye.blogspot.com
தலைநகர் கொழும்பில் பூகம்பம் பாதிப்புகள் ஏற்படும் அபாய நிலைமை உள்ளதாக புவியியல் துறையின் மூத்த பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அது கொழும்பு நகரை அதிகம் பாதிக்கும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஹிம்ச்சல் – உத்தரகாண்ட் மாநிலங்களில் வரும் வாரத்தில் 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய நிலநடுக்கவியல் ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்தியாவில் 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டால் அது கொழும்பை நிச்சயம் பாதிக்கும் என்று பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் ஹிம்ச்சல் பகுதிக்கு கீழே அமைந்துள்ள நகரத்தில் 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு கொழும்பில் கட்டிடங்கள் அதிர்ந்தன.
இவ்வளவு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் இந்தியாவில் நூற்றில் இருந்து நூற்றி ஐம்பது ஆண்டுகள் பழமையான கட்டிடங்கள் பாதிக்கப்படும் அபாயம் அதிகம் என்றார்.
Comments
Post a Comment