வரலாற்றில் இல்லாத அதிக வருமானத்தை ஈட்டிய இலங்கை கிரிக்கெட்- விபரங்கள்..

 வரலாற்றில் இல்லாத அதிக வருமானத்தை ஈட்டிய இலங்கை கிரிக்கெட்- விபரங்கள்..

2022 ஆம் ஆண்டில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 6.3 பில்லியன் ரூபா நிகர லாபத்தை ஈட்டியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 2022 ஆம் ஆண்டில் தனது அமைப்பின் வரலாற்றில் அதிக வருடாந்த நிகர வருமானத்தை ஈட்டியுள்ளதாக அறிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டில், கிரிக்கெட் நிறுவனம் 2.1 பில்லியன் ரூபா இலாபத்தை ஈட்டியது, அதன்படி, 2022 ஆம் ஆண்டளவில், கிரிக்கெட் நிறுவனம் மூன்று மடங்காக அதிகரிக்க முடிந்தது.

சர்வதேச கிரிக்கெட், உள்நாட்டு கிரிக்கெட், அனுசரணை ஒப்பந்தங்கள் மற்றும் ICC வருடாந்த உறுப்பினர் கொடுப்பனவுகள் ஆகிய 4 வருமானப் பிரிவுகளின் கீழ் இலங்கை கிரிக்கெட் இந்த இலாபத்தை ஈட்டியுள்ளது.

2022ஆம் ஆண்டில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேற்கொண்ட முதலீடுகள் தொடர்பான தகவல்களும்  (23) அறிவிக்கப்பட்டன. இதன்படி, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் சர்வதேச போட்டிகளுக்காக 4.2 பில்லியன் ரூபாவை முதலீடு செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. தேசிய அணியின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணங்கள், 'A' அணியின் போட்டிகள், இளைஞர் அணியின் பயணங்கள் மற்றும் மகளிர் அணியின் பயணங்களுக்காக இந்த பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 2022 ஆம் ஆண்டில் உள்நாட்டு கிரிக்கெட்டுக்காக 2.27 பில்லியன் ரூபாவை முதலீடு செய்துள்ளது. உள்ளூர் போட்டிகள், உயர் செயற்திறன் நிலையத்தின் செயற்பாடுகள், உள்ளூர் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் மற்றும் போட்டி அதிகாரிகளுக்கு பணம் செலுத்துதல் மற்றும் பாடசாலை கிரிக்கெட்டின் அபிவிருத்தி போன்றவற்றுக்கு இந்த பணம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கிரிக்கெட் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

2022 ஆம் ஆண்டில் 599 மில்லியன் ரூபாவை மைதான முகாமைத்துவம் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்காக மாவட்ட மற்றும் மாகாண சங்கங்கள் மற்றும் அங்கத்துவ விளையாட்டுக் கழகங்களுக்கு வழங்குவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இதேவேளை, கடந்த வருடம் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக 1.2 பில்லியன் ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அங்கு, நாட்டின் சுகாதாரத் துறைக்கு 900 மில்லியன் ரூபாவுக்கும் (முக்கியமாக அபேக்‌ஷா புற்றுநோய் வைத்தியசாலை மற்றும் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கும்), தேசிய விளையாட்டு நிதியத்திற்கு 278 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகவும், கங்காராம புனரமைப்புக்காக 25 மில்லியன் ரூபாவும் வழங்கப்பட்டது.

கண்டியில் உள்ள ரஜமஹா ஆலயம், 2022 ஆம் ஆண்டில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நிதிப் பங்களிப்பை நல்கியுள்ளது.

Comments