பயிற்சிக்காக பயன்படுத்தக்கூடிய மிக உயரமான மைதானத்தில் இலங்கை கிரிக்கெட் அணி.....
இலங்கை அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக தேசிய கிரிக்கெட் அணிஇ மீள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள ரதல்ல மைதானம் பயிற்சியில் ஈடுபடவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) அறிவித்துள்ளது.
நுவரெலியா, நானுஓயா – ரதல்ல பகுதியில் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள இந்த கிரிக்கெட் மைதானம், இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் பயிற்சிக்காக பயன்படுத்தக்கூடிய மிக உயரமான மைதானமாகவும் உள்ளது.
1856 ஆம் ஆண்டு கட்டப்பட்ட, ரதல்ல கிரிக்கெட் மைதானம் கடல் மட்டத்திலிருந்து 4200 அடி உயரத்தில் அமைந்துள்ளது. ரதல்லவை சூழவுள்ள பகுதிகள் நியூசிலாந்துக்கு மிகவும் ஒத்த தட்பவெப்ப நிலைகளைக் கொண்டுள்ளது. எனவே, நியூசிலாந்து புறப்படுவதற்கு முன் இலங்கை அணி நாளை (16) ரதல்லவுக்குச் சென்று ஒரு வார பயிற்சியை தொடங்கவுள்ளது. கிரிக்கெட் மைதானத்தில் 4 சென்டர் டர்ஃப் விக்கெட்டுகள் மற்றும் புதிதாக கட்டப்பட்ட பயிற்சி ஆடுகளங்கள் மற்றும் தேசிய அணியின் பயிற்சி அமர்வுகளை வெற்றிகரமாக நடத்துவதற்கான பிற வசதிகள் உள்ளன.
மேலும் கடந்த வாரம் இந்த மைதானத்தில் தேசிய அளவிலான கிரிக்கெட்டுக்கு இது பொருந்துமா என்பதை தீர்மானிக்க ஒரு பயிற்சி போட்டியும் நடைபெற்றது.
இந்த மைதானத்தின் உரிமையாளர்களான திம்புல தடகளக் கழகம் மற்றும் கிரிக்கெட் சங்கம் ஆகியன இணைந்து வழங்கிய உடன்படிக்கையின் அடிப்படையில்இ மைதானத்தின் மீள் அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கஇணைந்து வழங்கிய உடன்படிக்கையின் அடிப்படையில், மைதானத்தின் மீள் அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.
Comments
Post a Comment