பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகள் எப்போது வழங்கப்படும்?

 பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகள் எப்போது வழங்கப்படும்?

மாணவர்களுக்கான பாடசாலை சீருடைகளை மார்ச் 15ஆம் திகதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

எதிர்கால கல்வி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை அமுல்படுத்துவது தொடர்பாக கல்வி அமைச்சில் நேற்று (07) இடம்பெற்ற குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தேவையான சீருடைகளில் எழுபது சதவீதத்தை வழங்குவதற்கு ஒப்புக்கொண்ட சீன அரசாங்கம், ஏற்கனவே தனது முதல் தொகுதியை அனுப்பியுள்ளதாகவும், எஞ்சிய முப்பது சதவீதத்தை உள்ளூர் தனியார் வர்த்தகர்கள் வழங்குவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Comments