தேர்தலில் போட்டியிட சம்பளமின்றி விடுமுறை எடுத்த ஊழியர்கள் பலர் சிரமத்தில்.......
எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான நிச்சயமற்ற தன்மை காரணமாக பல வேட்பாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 3000க்கும் மேற்பட்ட அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் சம்பளமற்ற விடுமுறையில் உள்ளனர்.
தேர்தலை இன்னும் பல மாதங்கள் தாமதித்தால், சம்பளம் இல்லாமல் விடுப்பில் உள்ளதால் குடும்பத்தை நடத்துவது கூட சிரமமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இது குறித்து பல வேட்பாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர்.
Comments
Post a Comment