சடலமாக மீட்கப்பட்ட வர்த்தகர்: வாகனம் நீர்கொழும்பில் மீட்பு...

 சடலமாக மீட்கப்பட்ட வர்த்தகர்: வாகனம் நீர்கொழும்பில் மீட்பு...

கடனட்டை மூலம் விமான டிக்கெட், ரூ 5 இலட்சத்திற்கு கொள்வனவு: தம்பதியினரை தேடும் பொலிஸார்,

பத்தரமுல்லை, தலங்கம, பெலவத்த பகுதியில் அதிசொகுசு மாடி வீட்டில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்திலிருந்து, வர்த்தகர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்தில், தலங்கம பொலிஸார்   மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையின் அடிப்படையில் இது கொலை என தெரியவந்துள்ளது.

குறித்த வர்த்தகர் பயன்படுத்திய கார் நீர்கொழும்பு பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாகவும், குறித்த காரை செலுத்தி வந்த தம்பதியினர் வௌிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.

மூன்று நாட்களாக காணாமல் போயிருந்த SHADES எனும் ஆடையகத்தின் உரிமையாளரான கோடீஸ்வர வர்த்தகர் ரொஷான் வன்னிநாயக்கவின் (50) சடலம் அவரது பெலவத்தை எம்.டி.எச்.வீதியில்  உள்ள சொகுசு வீட்டின் 2ஆவது மாடியில் உள்ள நீச்சல் குளத்தில் மிதந்து கொண்டிருந்த வேளையில் (02)ம் திகதி கண்டுபிடிக்கப்பட்டது.

அவரது உடல் நிர்வாணமாக, அடையாளம் காண முடியாத அளவுக்கு வீங்கிய நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த நீச்சல் தடாகத்தின் அருகே ஏராளமான இரத்தக் கறைகள் இருப்பதால், இது கொலையாக இருக்கலாம் என பொலிஸார் கருதுகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் வர்த்தகர் தலையில் பலமாக தாக்கப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டு நீச்சல் குளத்திற்கு இழுத்துச் சென்று போடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. வர்த்தகரின் உள்ளாடைகள் நீச்சல் தடாகத்திற்கு அருகில் காணப்பட்டதாகவும், அவர் இறக்கும் போது அவர் நிர்வாணமாக இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நீச்சல் தடாகம் அமைந்துள்ள அதே இடத்தில் இரண்டு ஆணுறைகள் இருந்ததாகவும், அதில் ஆணுறை ஒன்று பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

குறித்த வர்த்தகர் 50 வயதான திருமணமாகாதவர். இவர் வெல்லம்பிட்டிய கிட்டம்புவேவில் உள்ள 'வீட்டில் வசித்து வந்துள்ளார். அவரது சடலம் கண்டெடுக்கப்பட்ட வீடு புனரமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் இதுவரை அந்த வீட்டிற்கு குடிபுறவில்லை எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Comments