வாக்குசீட்டுகளை அச்சிட முடியாது.......
உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பான அச்சிடும் பணிகளை பணம் செலுத்தும் வரை மேற்கொள்ள முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அரச அச்சக அலுவலக தலைவர் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
அதற்கான மதிப்பிடப்பட்ட தொகை சுமார் நானூற்று அறுபத்தொரு மில்லியன் ரூபா என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இன்று நடைபெறும் அரசியல் கட்சி செயலாளர்கள் கூட்டத்தில் இது குறித்து கவனம் செலுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி.புஞ்சிஹேவா நேற்று நடைப்பெற்ற ஊடக சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
Comments
Post a Comment