மட்/பாலமீன்மடு வைத்தியசாலைக்கு பஸ் சேவை.....
மட்டக்களப்பு பாலமீன்மடு வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளிகளின் நலன் கருதி வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் காலை 6 மணிக்கு விசேட பஸ் சேவை ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு முகாமையாளர் மு.சிறிதரன் தெரிவித்துள்ளார்.
இச்சேவையானது கருவேப்பங்கேணி, கூளாவடி, மாமாங்கம், குமாரபுரம் ஊடாக பாலமீன்ம மடு ஆஸ்பத்திரி, திராய்மடு புதிய வீட்டுத் திட்டம் வரை சென்று மீண்டும் அதே வழியாக மட்டுநகர் திரும்பும் எனவும் தெரிவித்துள்ளார். இச்சேவையை மக்களுக்கு வழங்குமாறு பாலமீன்மடு வைத்தியசாலை பொறுப்பதிகாரி Dr.இனியனின் வேண்டுகோளை விடுத்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Comments
Post a Comment