மின் உற்பத்திக்கு மேலதிக நீரை வழங்க முடியாது - மகாவலி அதிகாரசபை....
மின் உற்பத்திக்காக வழமையாக வழங்கப்படும் நீரை மாத்திரம் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக மகாவலி அதிகாரசபை, மின்சக்தி அமைச்சிற்கு அறிவித்துள்ளது.
எதிர்பார்த்தளவிற்கு மழை வீழ்ச்சி கிடைக்கப் பெறாமையின் காரணமாக கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் இடம்பெறும் காலப்பகுதியில் தொடர்ச்சியான மின் உற்பத்திக்கு தேவையான மேலதிக நீரை வழங்க முடியாது என்றும் மகாவலி அதிகாரசபை அறிவித்துள்ளது.
மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மகாவலி அதிகாரசபை இதனைக் குறிப்பிட்டுள்ளது. அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
உயர்தர பரீட்சைகள் நிறைவடையும் வரை தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்காக, மேலதிகமாக நீரை வழங்குவது தொடர்பில் நீர் முகாமைத்துவ குழுவில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
எவ்வாறிருப்பினும் எதிர்பார்த்தளவிற்கு மழை வீழ்ச்சி கிடைக்கப் பெறாமை மற்றும் விவசாயம், குடிநீர் தேவைகளைக் கருத்திற் கொண்டு வழமையைப் போன்று நீர் மின் உற்பத்திக்கான நீரை வழங்க இதன் போது தீர்மானிக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments
Post a Comment