கோரளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் புதிய கிராமம் புதிய நாடு வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் .....

வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் புதிய கிராமம் புதிய நாடு வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் .....

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் புதிய கிராமம் புதிய நாடு எனும் தேசிய ஒருங்கிணைந்த அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (08) இடம்பெற்றது.
பிறைந்துரைச்சேனை பிரிவில் வடக்கு மற்றும் தெற்கு, செம்மண்ணோடை ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் அனைத்து மக்களினதும் உணவு பாதுகாப்பினை ஏற்படுத்தும் நோக்குடன் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
பொருளாதார மற்றும் சமூக ரீதியாக வலுப்படுத்தும் இச்செயற்திட்டம் தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடலின் போது பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் அஸீன் தலைமையிலான, போதைப் பொருள் தடுப்பு, கிராம சேவைகள் மற்றும் சமூக அபிவிருத்தி, கிராமிய, மகளிர் கிராமிய மற்றும் சிறுவர் அபிவிருத்தி, கலாசார உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், மருத்துவ தாதிமார், பள்ளிவாயல்கள், சமூக அபிவிருத்திக் குழுக்கள் மற்றும் விளையாட்டுக் கழகங்கள் போன்றவற்றின் தலைவர்களையும் பிரதிநிதிகளையும் உள்ளடக்கியதான குழுவினரால் “புதிய நாடு புதிய கிராமம்” அபிவிருத்தித் திட்டம் தயாரிக்கப்பட்டது.




Comments