காத்தான்குடியில் சிறுவன் தாக்கப்பட்டுக் கொலை......
காத்தான்குடி பகுதியில் சிறுவன் ஒருவன் கொடூரமாக தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளார். 11 வயது சிறுவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறுவனின் தாயின் இரண்டாவது கணவரே சிறுவனை தாக்கியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சிறுவன் சந்தேக நபரால் தாக்கப்பட்டு மட்டக்களப்பு வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறுவனின் தந்தை கடந்த 8ஆம் திகதி காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார், சந்தேகநபரை அன்றைய தினமே கைது செய்தனர். மாத்தளைப் பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய சந்தேக நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (9) சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் சந்தேக நபரை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
எனினும் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு மட்டக்களப்பு வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் நேற்று (09) பிற்பகல் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, பொலிஸார் இன்று (10) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் விடயங்களை முன்வைக்க உள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
Comments
Post a Comment