க.பொ.த உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டு கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் கலந்துரையாடல்.....

 க.பொ.த உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டு கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் கலந்துரையாடல்.....

க.பொ.த உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டு கொடுப்பனவுகளை அதிகரிப்பது மற்றும் நிலுவைத் தொகையை செலுத்துவது தொடர்பில் நிதி அமைச்சுடன் தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுசன ஊடக அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள தொகையை அதிகரிப்பதற்கு கல்வி அமைச்சர் சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு கொள்கை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சின் செயலாளருடன் கலந்தாலோசித்து கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

பரீட்சை பெறுபேறுகள் தாமதமானால் அது பிள்ளைகளின் வாழ்க்கையை பாதிக்கும் எனவும், எனவே பிள்ளைகளின் நலன் கருதி விரைவில் பெறுபேறுகளை வெளியிட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments