கிழக்கு மாகாண இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளராக மாஹீர் பதவி உயர்வு: Battieye.blogspot.com

 கிழக்கு மாகாண இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளராக மாஹீர் பதவி உயர்வு: Battieye.blogspot.com

காத்தான்குடியை சேர்ந்த எம்.ஐ.எம்.மாஹீர் கிழக்கு மாகாண இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
இந்த திணைக்களத்தில் பிரதி ஆணையாளராக கடமையாற்றி வந்த நிலையிலேயே மாஹீர் ஆணையாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
உள்நாட்டு இறை வரித் திணைக்களத்தில் வரி உத்தியோகத்தராக இணைந்து மதிப்பீட்டாளராக கடமையாற்றி உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பிரதி ஆணையாளராக கடமையாற்றி வந்த நிலையிலேயே ஆணையாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவருக்கான இந்த நியமனம் கிழக்கு மாகாண ஆளுனரினால் வழங்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி ஹிழுறியா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியை கற்ற மாஹீர் உயர் கல்வியை காத்தான்குடி மத்திய கல்லூரியில் கற்றதுடன் பல்கலைக்கழக கல்வியை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும் கற்றுள்ளார்.
மில்லத் மகளிர் வித்தியாலயத்தில் உதவி ஆசிரியராகவும் மண்முனைப் பற்று பிரதேச செயலகத்தில் மேலதிக உதவி அரசாங்க அதிபராகவும் கடமையாற்றியுள்ளதுடன், பல சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளார்.

Comments