"அர்த்தமுள்ள சிறுவர் பங்களிப்பு" வழிகாட்டல் கருத்தரங்கு .....
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் செயற்படும் சிறுவர் கழகங்களை ஒன்றிணைத்து," அர்த்தமுள்ள சிறுவர் பங்களிப்பு" என்னும் தொனிப்பொருளிலான வழிகாட்டல் கருத்தரங்கு உதவிப் பிரதேச செயலாளர் எம். ஏ. சி. ரமீஸா தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் (03) நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பிரதேசத்தில் செயற்படும் சிறுவர் சபைகளின் உறுப்பினர்களுக்கான சிறுவர் உரிமை சாசனம், அதன் வரலாறு மற்றும் பிரதான கொள்கைகள் தொடர்பாக இதன்போது சிறுவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
Comments
Post a Comment