மின் கட்டண உயர்வு யாருக்கு அதிகம் பாதிப்பு....
மின் கட்டண உயர்வானது, 0 முதல் 90 அலகுகள் வரை மின்சாரத்தைப் பாயன்படுத்தும் பாவனையாளர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 30 அலகுகள் வரையான மின் பாவணையாளர்களுக்குஇ 214 ரூபாவாக உள்ள மின் கட்டணம் 453 ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது நூற்றுக்கு 251 வீத அதிகரிப்பாகும்.
31 முதல் 60 வகையான அலகுகளுக்கு உட்பட்ட மின் பாவணையாளர்களுக்கு 677 ரூபாவாக இருந்த மின் கட்டணம் 2 ஆயிரத்து 178 ரூபாவாக அதிகரிக்கின்றது. இது நூற்றுக்கு 221 வீத அதிகரிப்பாகும்.
61 முதல் 90 வரையான அலகுகளுக்கு உட்பட்ட மின் பாவனையாளர்களுக்கு, ஆயிரத்து 825 ரூபாவாக இருந்த கட்டணம் 9 ஆயிரத்து 370 ரூபா வரையில் அதிகரிக்க உள்ளது. இது நூற்றுக்கு 144 வீத அதிகரிப்பாகும்.
66 சதவீத மின்கட்டண அதிகரிப்பு அமுலில் உள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இதன்படி, 0 முதல் 30 அலகுகள் வரையான மின் கட்டணம் 120 ரூபாவில் இருந்து, 400 ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
31 முதல் 60 அலகுகள் வரையான மின் கட்டணம் 240 ரூபாவில் இருந்து, 550 ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
61 முதல் 90 அலகுகள் வரையான மின் கட்டணம் 360 ரூபாவில் இருந்து, 650 ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
91 முதல் 120 அலகுகள் வரையான மின் கட்டணம் 960 ரூபாவில் இருந்து, ஆயிரத்து 500 ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
121 முதல் 180 அலகுகள் வரையான மின் கட்டணம் 960 ரூபாவில் இருந்து, ஆயிரத்து 500 ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
180 இற்கும் மேற்பட்ட அலகுகளுக்கான கட்டணம், ஆயிரத்து 500 ரூபாவில் இருந்து, 2 ஆயிரம் ரூபா வரையில் உயர்த்தப்பட்டுள்ளதாக மின்சார சபை அறிவித்துள்ளது.
இதேவேளை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட மின் கட்டணத் திருத்தத்தை அமுல்படுத்துவதினால் சிரமங்களை எதிர்நோக்கும் தரப்பினருக்கு நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி மின்சக்திக்தி அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, மின் பாவனையாளர்களுக்கு தொடர்ச்சியாக மின்சாரம் வழங்குதல், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குதல், மத ஸ்தலங்கள் மற்றும் அரச கல்வி நிறுவனங்களுக்கு சூரிய மின் தகடுகளை வழங்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அதேநேரம், நேற்று முதல் நாடளாவிய ரீதியாக தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment