சிறு தொழில் முயற்சியாளர்களுக்கு கை கொடுப்போம் ......
வாகரை பிரதேசத்தில் உள்ள Hela Bojun பாரம்பரிய உணவகத்தில் சுவையான உணவுகள் நியாயமான விலையில் கிடைக்கின்றன. பார்ப்பதற்கு மிக பிரபல்யமான இடம் போல் இல்லாவிட்டாலும் தரமான உணவுக்கு இது சிறந்த இடமாக காணப்படுகின்றது.
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் நியாய விலையில் இங்கு உணவுகளை பெற்றுக் கொள்ள முடியும். அக்கரைப்பற்று திருகோணமலைக்கு இடையில் சுமார் இருபதிற்கும் மேற்பட்ட பேரூந்துகள் சேவையில் ஈடுபடுகின்றன, இவற்றுள் இரண்டு பேருந்துகள் நிறுத்தினாலே போதும் அவர்களின் வாழ்க்கையும் முன்னேறும் கண்ட விடும். இவர்களின் வேண்டுகோள் தாங்கள் கோடிஸ்வரர் ஆக வேண்டும் என்பதல்ல தங்கள் அன்றாட வாழ்க்கை கொண்டு நடத்த தேவையான வருமானத்தையே உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறார்கள்.
எனவே இப்பாதையூடாக பயணிக்கும் அன்புள்ளம் கொண்ட பேரூந்து ஓட்டுனர்கள், வான் சாரதிகள், தனிப்பட்ட பயணங்களை மேற் கொள்வோர் சற்று இவ்விடத்தில் தரித்து இவர்கள் உணவையும் புசித்துச் செல்லுமாறு தயவாய் வேண்டி நிற்கின்றோம்.
Comments
Post a Comment