சந்தர்பால் மகனை அவுட் ஆகிய நிடினி மகன் ; அடுத்த தலைமுறைகளின் கிரிக்கெட் போர்!
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி தற்பொழுது தென்ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடுத்து தலா மூன்று ஒருநாள் மற்றும் T/20 தொடர்களில் தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது.
இதற்கு முன்னதாக ஒரு பயிற்சி டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க லெவன் அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இந்த பயிற்சி போட்டியில் சுவாரசியமான ஒரு சம்பவம் நடந்துள்ளது!
இந்த பயிற்சி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஷிவ்நரைன் சந்தர்பால் மகன் தேஜ்நரைன் சந்தர்பால் விளையாடுகிறார். இவர் சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஆஸ்திரேலியா அணிக்காக அதிவேக பெர்த் ஆடுகளத்தில் அறிமுகமாகி முதல் இன்னிங்ஸில் அரைசதம் அடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இதற்கு அடுத்து ஜிம்பாபேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அசத்தலாக விளையாடி இரட்டை சதம் அடித்து ஆச்சரியப்படுத்தினார்.
இதேபோல் தென்னாபிரிக்க லெவன் அணிக்காக தென் ஆப்பிரிக்க அணிக்கு வெற்றிகரமான வேகப்பந்துவீச்சாளராக விளங்கிய மஹாயா நிடினியின் மகன் விளையாடுகிறார். இவரும் தன் தந்தையைப் போலவே வேகப்பந்துவீச்சாளர்.
முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தேஜ்நரைன் சந்தர்பால் துவக்க ஆட்டக்காரராக வர, மிக அபாரமாக பந்து வீசிய தண்டோ நிடினி ஒரு பந்தை லேட் இன் ஸ்விங் ஆக அனுப்ப, அதை கவர் திசையில் தூக்கி அடிக்க முயற்சி செய்த தேஜ்நரைன் சந்தர்பால் கேட்ச் கொடுத்து ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார்.
முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஒன்பது விக்கட்டுகள் இழப்பிற்கு 283 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதற்கு அடுத்து களம் கண்ட தென்னாபிரிக்க அணி அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 317 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றுள்ளது.
அடுத்து அடுத்த தலைமுறைகளின் கிரிக்கெட் போர் ஆரம்பித்துள்ளது.
Comments
Post a Comment