கண்ணாடியற்ற புகைப்பட கருவி மற்றும் காணொளி கருவியின் தொழில் நுட்பம் தொடர்பான பயிற்சி பாசறை....
கண்ணாடியற்ற புகைப்பட கருவி மற்றும் காணொளி கருவியின் தொழில் நுட்பம் தொடர்பான (Mirrorless Camera & Video Camera Technology) பயிற்சி பாசறை அரசாங்க தகவல் திணைக்களம் மற்றும் மெற்ரோபொலிட்டன் நிறுவனம் இணைந்து (27) தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
வெகுசன மற்றும் போக்குவரத்து பெருந்தெருக்கள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
ஊடக துறையில் கடமையாற்றும் நபர்களின் திறமை மற்றும் ஆளுமையை விருத்தி செய்து வலுப்படுத்துவதற்கான புதிய தொழில் நுட்பங்கள் இதன் போது அறிமுகப்படுத்தப்பட்டதுடன் உள்ளக மற்றும் வெளிக்களத்தில் இவ் பயிற்சி பாசறை இடம் பெற்றதுடன் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் அதிதிகளினால் வழங்கப்பட்டது.
Comments
Post a Comment