அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு......
தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிலையத்தால் நடாத்தப்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கான 150 மணித்தியாலங்கள் கொண்ட இரண்டாம் மொழி பயிற்சியை முடித்துக் கொண்ட அரச உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு (17) அன்று மட்டக்களப்பு டேபா மண்டபத்தில் நடைபெற்றது.
இப்பயிற்சி நெறியை முடித்துக் கொண்ட மட்டக்களப்பு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கும், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு இச்சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி பிரசாத் R.ஹேரத் அவர்களும், உதவி பணிப்பாளர் பஸ்மிலா ரவிராஜ் அவர்களும் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.
இதே வேளை மாவட்ட செயலக சமுர்த்தி பிரிவில் கடமையாற்றும் 05 சமுர்த்தி உத்தியோகத்தர்களும் இவ்விரண்டாம் மொழி கல்வியில் சிந்தியடைந்துள்ளனர் எனவே அவர்களை மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் அவர்களும் பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments
Post a Comment