போதைப்பொருள் தடுப்பு தொடர்பான கலந்துரையாடல்.......

 போதைப்பொருள் தடுப்பு தொடர்பான கலந்துரையாடல்.......

வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட போதைப்பொருள் தடுப்பு தொடர்பான கலந்துரையாடல் கிராம சேவை உத்தியோகத்தர் சஜ்மி தலைமையில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு வாழைச்சேனை பிறைந்துறைச்சேனை கிராம உத்தியோகத்தர் பிரிவில் போதைப்பொருள் தடுப்பு தொடர்பான கலந்துரையாடல் மற்றும் சிவில் பாதுகாப்பு குழு தெரிவு செய்யப்பட்டு, பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
இந்நிகழ்வில் பிறைந்துறைச்சேனைப் பிரிவின் பொருளாதார, சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர், பொலிஸ் அதிகாரிகள், பள்ளிவாயல் தலைவர்கள், கிராம மட்ட போதைப்பொருள் தடுப்புக்காக நியமிக்கப்பட்ட அங்கத்தவர்கள், பிரதேச வாசிகள் என பலரும் கலந்து கொண்டனர்.



Comments