நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்துவோரிடமிருந்து மாதாந்த கட்டணத்தை அறவிட யோசனை......

 நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்துவோரிடமிருந்து மாதாந்த கட்டணத்தை அறவிட யோசனை.......

நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் மக்களிடம் இருந்து மாதாந்த கட்டணத்தை அறவிடுவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளை பராமரிக்க முடியாத நிலையில் உள்ளதால், வீதி அபிவிருத்தி நிதியத்தை உருவாக்கி அதற்கான பணத்தை வசூலிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

நிதியமைச்சின் முன்மொழிவின் அடிப்படையில் இந்தக் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டதன் பிரகாரம் இந்த நிதியம் ஸ்தாபிக்கப்படும் எனவும்இ அதற்கு அரசாங்கம் முதலில் 100 மில்லியன் ரூபாவை வரவு வைக்கும் எனவும் அவர் கூறினார்.

Comments