பொலித்தீன் பாவனை தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு......

 பொலித்தீன் பாவனை தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு......

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துடன் கிறிஸ்தவ இளைஞர் சங்கத்தினர் இணைந்து ஏற்பாடு செய்த பொலித்தீன் பாவனை தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
பொலித்தீன் பாவனையை குறைத்தல் மற்றும் மாற்றீட்டு பொருட்களை பயன்படுத்தல் தொடர்பான 3 வருட திட்டத்தின் 1வது காலாண்டு நிகழ்வாக இச்செயலமர்வு இடம்பெற்றுள்ளது.
பொலித்தீன் என்றால் என்ன? பொலித்தீனால் சுற்றாடலுக்கு ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றியும் இதன்போது தெளிவுபடுத்தப்பட்டது.
இதன் போது பிரதேச சுற்றாடல் செயற்குழு உறுப்பினர் வளவாளராக செயற்பட்டதுடன் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.



Comments