மட்டக்களப்பில் கிராமிய பொருளாதார உணவுப் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்ட மதிப்பீடு.......
கிராமிய பொருளாதார உணவுப் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டத்தை மதிப்பீடு செய்வதற்கான வேலைத்திட்டம் (01)ம் திகதி முன்னெடுக்கப்பட்டது இதற்கமைய கோறளைபற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் கிராமிய பொருளாதார உணவுப் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டத்தை மதிப்பீடு செய்வதற்காக மட்டக்களப்பு மாவட்ட செயலக அதிகாரிகள் பிரதேச செயலகப் பிரிவிற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.
இதன் போது வாழைச்சேனை, பிரிந்துரைசேனை பிரதேசத்தில் ஷாதுலிய்யா மகா வித்தியாலயத்தின் சிறந்த மரநடுகை, ஓட்டமாவடி மஜ்ம கிராமத்தில் சிறந்த வீட்டு தோட்டம், செம்மன்னோடை பிரதேசத்தில் சிரமதானம் மற்றும் தியவட்டவான் பகுதியில் கிராமிய புத்தெழுச்சி மையம் ஆகியவை பார்வையிடப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டது.
Comments
Post a Comment