விபுலானந்த சங்கீதம் இசை இறு வெட்டு வெளியீட்டு விழா.. Battieye.blogspot.com
விபுலானந்த சங்கீதம் இசை இறு வெட்டு வெளியீட்டு விழா கிழக்கு பல்கலைக்கழகம் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் (23) திகதி இடம் பெற்றது.
சுவாமி விவேகானந்தரின் புகழ் பேற்றும் பாடல்கள் அடங்கிய இசை இறுவெட்டு நிகழ்வு சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் புளோரன்ஸ் பாரதி கென்னடி தலைமையில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு ஆன்மீக அதிதியாக மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஶ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகாராஜ், முன்னிலை அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் ஓய்வு நிலை பேராசிரியர் எம்.செல்வராஜா, முதன்மை விருந்தினர்களாக, கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் வல்லிபுரம் கனகசிங்கம், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா, கௌரவ அதிதிகளாக மேலதிக அரசாங்க அதிபர் (காணி) நவரூபரஞ்சனி முகுந்தன், சுவாமி விபுலானந்தா நூற்றாண்டு விழா சபை தலைவர் கே.பாஸ்கரன் மற்றும் மண்முனை வடக்கு, காத்தான்குடி, மண்முனை தென் எருவில் பற்று ஆகிய பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், மதிப்பீட்டாளராக சிரேஷ்ட ஊடகவியலாளரும் சக்தி பண்பலை, அலைவரிசை பிரதானியுமான ஐயாத்துரை கஜமுகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.
இசைத்துறையினால் ஒருங்கிணைக்கப்பட்ட இவ் இறுவெட்டு வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், முதற்பிரதிகள் அதிதிகளிற்கு வழங்கி வைக்கப்பட்டதுடன், சுவாமி விபுலானந்தா அழகிய கற்கை நிறுவக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நடன நிகழ்வுகளும் இடம் பெற்றிருந்தது.
அதனைத் தொடர்ந்து இந்நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
Comments
Post a Comment