விருந்தோம்பல் துறையில் கல்வி கற்ற இளைஞர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு:Battieye.blogspot.com

 விருந்தோம்பல் துறையில் கல்வி கற்ற இளைஞர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு:Battieye.blogspot.com

விருந்தோம்பல் துறையில் கல்வி கற்ற இளைஞர் யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கல்லடியில் உள்ள தனியார் விடுதியில் இன்று (28) இடம் பெற்றது.
தேசிய பயிலுணர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபை நடத்திய 20 நாள் பயிற்சி பட்டறையை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்ள கூடிய வகையில் இப்பயிற்சிப் பட்டறை அமைந்திருந்தது.
மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான இப்பயிற்சிப் பாசறையில் 40 இளைஞர் யுவதிகள் பங்குபற்றியிருந்தனர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஶ்ரீகாந்த், சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் திட்ட இணைப்பாளர் ஸ்ரீயானி ஏக்கநாயக்க, தேசிய தொழில் பயிற்சி அதிகார சபையின் திட்டமிடல் மற்றும் மேற்பார்வை பணிப்பாளர் பி.ஆர்.ரொட்ரிக்கோ, ரொட்ரி கழகத்தின் முன்னால் தலைவர் ஸ்டீபன் புஷ்பராஜா , இலங்கை வர்த்தக சமேளனத்தின் பிரதி செயலாளர் நாயகம் எம்.விஜேசூரிய என பலர் கொண்டனர்.
இதன்போது வடக்கு, கிழக்கு மாகாணங்களின், விருந்தோம்பல் துறை சிரேஷ்ட பயிற்றுவிப்பாளர் கே.எஸ்.தாசன் வளவாளராக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.






Comments