ஆசிரியர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள கொடுப்பனவு – வெளியான மகிழ்ச்சி தகவல்... Battieye.blogspot.com

 ஆசிரியர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள கொடுப்பனவு – வெளியான மகிழ்ச்சி தகவல்... Battieye.blogspot.com

உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (23) உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில், உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை நிலவுகின்றது. 19,000 ஆசிரியர்கள் தேவைப்படுகின்ற போதிலும், இதுவரை 15,000 ஆசிரியர்களே விண்ணப்பித்துள்ளனர்.

ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் அமைச்சரவைப் பத்திரம் ஒரு மாதத்திற்கு முன்னரே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் சிரமங்கள் இருந்த போதிலும், அமைச்சரவை அதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி, ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் பெறுபேறுகளை பூர்த்தி செய்வதற்கு 1,300 பல்கலைக்கழக பேராசிரியர்கள் தேவைப்படுகின்றனர்.

மேலும் அவர்களுக்கும் தொழில் ரீதியாக பிரச்சினை காணப்படுகின்றது. எனவே எதிர்வரும் வெள்ளிக்கிழமை நிதி அமைச்சுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளோம்.'என தெரிவித்துள்ளார்.

Comments