மட்டக்களப்பில் ஆயர் தலைமையில் இடம்பெற்ற திருநீற்றுப் புதன் விசேட ஆராதனை (ASH Wednesday)........
உலகெங்கும் வாழும் கத்தோலிக்கர்களால் பெப்ரவரி 22 திகதி திருநீற்றுப் புதன் என்று அழைக்கப்படும் தவக்காலத்தின் ஆரம்ப நாள் அனுஷ்டிக்கப்படுகின்றது.
இந்த திருநீற்றுப் புதன் விபூதிப் புதன், சாம்பல் புதன் என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றது. இன்றைய நாளில் ஒரு சந்தியும், சுத்தபோசனமும் (மாமிச தவிர்ப்பு), அனுஷ்டிக்க கத்தோலிக்க திருச்சபை கட்டளையிட்டுள்ளது. சிறியவர்களும்
நோயாளர்களும் முதியவர்களும் இந்தக் கட்டளையிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர்.
இப் புதனன்று முதல் நாம் தவக்காலத்திற்குள் நுழைகிறோம். இதனைத் தொடர்ந்து வரும் 40 நாட்களும் நமது செப, தவ, ஒறுத்தல் முயற்சிகளுக்காக நமக்கு கொடுக்கப்பட்ட காலமாக கருதப்படுகின்றது. தவக்காலம் வசந்தத்தைக் கொண்டு வருவதற்கு முன்னதான காலமாக இக்காலம் கருதப்படுகின்றது.
Comments
Post a Comment