9 மாகாணங்களுக்கிடையில் கராத்தே சுற்றுப் போட்டியில் மட்டக்களப்பு மாணவர்கள் சாதனை.....
நிப்போன் பெயிண்ட் அனுசரணையில் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 9 மாகாணங்களுக்கிடையில் கராத்தே சுற்றுப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்டு 22 பதக்கங்களை பெற்றுக் கொண்ட மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கழகத்தின் தலைவர் கே.டி.பிரகாஷ் தலைமையில் மட்டக்களப்பில் நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டு மாணவர்கள் பாராட்டி சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.
நிகழ்வில் கழகத்தின் பயிற்றுவிப்பாளர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கொழும்பில் நடைபெற்ற சுற்றுப்போட்டியில் கலந்து கொண்டு 8 தங்கப் பதக்கங்களையும் 8 வெள்ளி பதக்கங்களையும் 6 வெண்கல பதக்கங்களை பெற்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாணவர்களையும், தரப்படுத்தல் அடிப்படையில் 75 மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment