7 பவுண் தங்கத்தை பதுக்கிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது.....
தங்கப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாணந்துறை தலைமை காவல்நிலையத்தின் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி மற்றும் கான்ஸ்டபிள் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
தங்கப் பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கப் பொருட்களில் இருந்து 7 பவுண் தங்கத்தை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தாமல் தம்வசம் வைத்திருந்த சம்பவம் தொடர்பிலேயே இந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்டி வலய குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் சந்தேக நபரான பொலிஸ் உத்தியோகத்தர்களை கைது செய்துள்ளனர்.
Comments
Post a Comment