வாழைச்சேனையில் "75ல் முன்மாதிரியான இளைஞர்கள் - பசுமையான இலங்கை" வேலைத் திட்டம்.......

 வாழைச்சேனையில் "75ல் முன்மாதிரியான இளைஞர்கள் - பசுமையான இலங்கை" வேலைத் திட்டம்.......

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி தியாவட்டவான் பிரதேசத்தின் கண்ணகை அம்மன் கோவில் முன்பாக (07) சிரமதானமும், பிரதேச செயலக வளாகத்தில் மரநடுகையும் இடம்பெற்றது.
வாழைச்சேனை, கோறளைப்பற்று மத்தி, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஏற்பாடு செய்த "75ல் முன்மாதிரியான இளைஞர்கள் - பசுமையான இலங்கை" என்ற இச்செயற்திட்டம் கோரளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலாளர் எஸ். எச். முஸம்மில் தலைமையில் நடைபெற்றது.
இச்சிரமதான நிகழ்வில் பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் யு.எல்.ஏ.ஹமீத், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இளைஞர் கழக உறுப்பினர்கள் மரம் நடுகை மற்றும் சிரமதான செயற்பாடுகளில் கலந்துகொண்டனர்.





Comments