ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தில் 75வது சுதந்திர தின நிகழ்வு.
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 75வது சுதந்திர தின நிகழ்வானது ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் K.தனபாலசுந்தரம் அவர்களின் தலைமையில் ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தில் (04) நடைபெற்றது.
இதன் போது தேசியக் கொடியினை பிரதேச செயலாளர் ஏற்றி வைத்ததை தொடர்ந்து, தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் மர நடுகை நிகழ்வும் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர், கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர், நிருவாக கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment