வெல்லாவெளி பிரதேச செயலகத்தில் 75வது தேசிய சுதந்திர தின நிகழ்வு.....

 வெல்லாவெளி பிரதேச செயலகத்தில் 75வது தேசிய சுதந்திர தின நிகழ்வு.....

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 75வது தேசிய சுதந்திர தின நிகழ்வு மாட்டக்களப்பு போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் செல்வி.ஆர். ராகுலநாயகி அம்மணி தலைமையில் (04) இடம்பெற்றது.
சம்பிரதாயபூர்வமாக தேசியக்கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் பாடப்பட்டு, நாட்டுக்காக உயிர்நீத்தோருக்காக 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவற்குடா பிள்ளையார் ஆலய குருக்கள் செ.கு.உதயகுமாரினால் ஆசியுரையும் பிரதேச செயலாளரினால் சுதந்திர தின உரையும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் நாட்டின் 75ஆவது தேசிய சுதந்நிர தினத்தன்று 75 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் வயோதிப அம்மணி ஒருவர் பொன்னாடை போர்த்தி பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்று சமுர்த்தி வலயங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட சில பயனாளிகளுக்கு வாழ்வாதார கடன் மற்றும் வன்னி கோப் நிறுவனத்தினால் 30 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டது.
மேலும், 75வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறந்த சிரமதானத்திற்காக மாவட்ட, பிரதேச செயலக மட்டத்தில் திக்கோடை, சிறந்த வீட்டுத் தோட்டத்திற்காக வம்மியடியூற்று, சிறந்த மரநடுகைக்காக மண்டூர் தெற்கு மற்றும் சிறந்த பொருளாதார புத்தெழுச்சி மையமாக விவேகானந்நபுரம் ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் பிரதேச செயலக மட்ட மதிப்பீட்டில் தெரிவு செய்யப்பட்டு, சான்றிதழ்களை பெற்றுக்கொண்டன.
பிரதேச செயலக வளாகத்தில் சுதந்திர தின ஞாபகார்த்த மரநடுகையும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் வி.துலாஞ்சனன், பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் ச.சசிகுமார், கணக்காளர் தி.அம்பிகாபதி, நிருவாக உத்தியோகத்தர் தி.உமாபதி, சமுர்த்தி தலைமையக முகாமையாளர் ஆ.தனேந்திரராசா, சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் அ.குககுமாரன், சமூகசேவை உத்தியோகத்தர் ஆ.சபேசன் உள்ளிட்ட போரதீவுப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.






Comments