மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் 75வது சுதந்திர தின நிகழ்வு......
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் 75வது சுதந்திர தின நிகழ்வானது மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் அவர்களின் தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இதன் போது 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடி பிரதேச செயலாளரால் ஏற்றி வைக்கப்பட்டதை தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதன் போது மர நடுகை நிகழ்வும் அதனைத் தொடர்ந்து சகல உத்தியோகத்தர்களாலும் சிரமதான நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments
Post a Comment