ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் 75வது தேசிய சுதந்திர தினம்......
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இலங்கையின் 75வது சுதந்திர தின நிகழ்வுகள் பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜுத் தலைமையில் சிறப்பாக நடை பெற்றது.
தேசிய கொடியேற்றப்பட்டு அலுவலக உத்தியோகத்தர்களால் தேசிய கீதம் இசைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. பிரதேச செயலாளரினால் சுதந்திர திரை உரையும் நிகழ்த்தப்பட்டது.
இந்நிகழ்வில் ஏறாவூர் வர்த்தக சங்க அனுசரணையில் 75வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் கௌரவிக்கப்பட்டனர். ஏறாவூர் நகர சமூக பராமரிப்பு நிலையத்தில் மரநடுகையும் மேற்கொள்ளப்பட்டது.
Comments
Post a Comment