படகு விபத்தில் 73 அகதிகள் பலி.....
ஐரோப்பிய நாடுகளை நோக்கி வந்துகொண்டிருந்த அகதிகள் படகு, லிபியா அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 75 போ் உயிரிழந்தனா்.
இது குறித்துஇ ஐ.நா.அகதிகள் நல அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் பெற விரும்பிய அகதிகளை சட்டவிரோதமாக ஏற்றி வந்த படகு லிபியா அருகே மத்தியதரைக் கடல் பகுதியில் செவ்வாய்க்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 75 அகதிகள் கடலில் மூழ்கி உயிரிழந்தனா். அவா்களில் 11 பேரது உடல்களை லிபியா மீட்புக் குழுவினா் மீட்டனா்.
இந்த விபத்தில் 7 அகதிகள் உயிா் தப்பி, லிபியா கடற்கரைக்கு வந்து சோ்ந்தனா். மிகவும் மோசமான உடல்நிலையுடன் காணப்பட்ட அவா்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போா் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆசிய நாடுகளைச் சோ்ந்த ஏராளமானவா்கள், ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் தேடி மத்தியதரைக் கடல் வழியாக ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனா்.
அண்மைக் காலமாக, அத்தகைய அகதிகளை சட்டவிரோதமாக அழைத்துச் செல்வதற்கான போக்குவரத்து மையமாக லிபியா உருவாகி வருகிறது.
Comments
Post a Comment