7 பொருட்களுக்கு விரைவில் தடை.....
மீள் பயன்பாடற்ற 07 பிளாஸ்டிக் பொருட்களை நாட்டிற்குள் உற்பத்தி செய்தல், விற்பனை செய்தல் மற்றும் நாட்டிற்கு இறக்குமதி செய்வதனை தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுற்றாடல் அமைச்சர் அமைச்சரவைக்கு முன்வைத்த யோசனைக்கு அனுமதி கிடைக்கப்பட்டுள்ளமையை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது
இதற்கமைய எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் தடை செய்யப்படவுள்ளது.
ஸ்ட்ரோ, யோகட் கரண்டி வகைகள், பிளாஸ்டிக் கலவை உபகரணம், பிளாஸ்டிக் கத்தி, பிளாஸ்டிக் இடியப்ப தட்டுக்கள், பிளாஸ்டிக் மலர் மாலைகள் ஆகியன தடைசெய்யப்பட்ட பொருட்களுக்குள் உள்ளடங்குவதாக சுற்றாடல் அமைச்சு அறிவித்துள்ளது.
Comments
Post a Comment