தளபதி 67' படத்தின் மாஸ் தலைப்பு அறிவிப்பு..!
தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'தளபதி 67' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
தற்போது காஷ்மீரில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் (03) மாலை ஐந்து மணிக்கு இந்த படத்தின் டைட்டில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் மாஸ் டைட்டில் வெளியாகியுள்ள நிலையில் அது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 'தளபதி 67' படத்திற்கு 'லியோ' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ரசிகர்கள் அந்த டைட்டிலை கொண்டாடி வருகின்றனர். மேலும் படக்குழுவினர் வெளியிட்டுள்ள 2.49 நிமிட வீடியோவின் இறுதியில் 'பிளடி ஸ்வீட்' என்ற விஜய்யின் வசனம் மாஸ் ஆக உள்ளதை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த படம் 2023ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment