50வருட நிகழ்வை முன்னிட்டு சைக்கிள் சவாரி செய்த சிவானந்தியன்....

  50வருட நிகழ்வை முன்னிட்டு சைக்கிள் சவாரி செய்த சிவானந்தியன்....

தமது கழகத்தின் 50 வது வருட இறுதி நிகழ்வுகளில் ஒன்றாக சிவானந்தா விளையாட்டு கழகம் ஒரு சைக்கில் சவாரி நிகழ்வை 18ம் திகதி காலை நடாத்தி இருந்தது. இந்நிகழ்வானது தலைவர் க. யோகராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இச்சைக்கிள் சவாரியானது சிவானந்தா மைதானத்தில் இருந்து ஆரம்பமாகி பழைய கல்முனை வீதியூடாக சென்று பின்னர்  புதிய கல்முனை வீதியூடாக அரசடி சந்தி வரை சென்று மீண்டும் சிவானந்தா மைதானம் வந்தடைந்தது.

இந்நிகழ்வில் சிவாந்தா விளையாட்டு கழகத்தின் மூத்த உறுப்பினர்கள் தொடக்கம் இளையவர்கள் வரை கலந்து கொண்டது குறிப்பிடத்தக்க விடயமாகும். நூளை 19ம் திகதி அவர்களின் 50வது ஆண்டு நிறைவையோட்டி சிறப்பு மலர்  ஒன்றை வெளியிடவுள்ளதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
















Comments