வாக்குச்சீட்டு அச்சிட மேலும் 360 மில்லியன் ரூபா அவசியம் ......
வாக்கு சீட்டு அச்சிடும் பணிகளுக்காக 400 மில்லியன் ரூபா அவசியம் என அரச அச்சகமா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.
எனினும், அந்த நிதியில் 40 மில்லியன் ரூபா மாத்திரமே கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் 360 மில்லியன் அவசியமாகவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டாலும் விநியோக பணிகளுக்கு 3, 4 நாட்கள் செல்லும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment