36 ஆயிரம் தபால் மூல விண்ணப்பங்கள் நிராகரிப்பு !
இவ்வருடம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் பெறப்பட்ட தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களில் 36 ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. பூர்த்தி செய்வதில் குறைபாடுகள் இருப்பதால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க 676,873 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதில் குருணாகல் மாவட்டத்தில் அதிகளவாக (75,579) வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். மேலும், அனுராதபுரம் மாவட்டத்தில் 55,750 பேரும், கண்டி மாவட்டத்தில் 54,012 பேரும் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் குறைந்தளவான தபால் மூல வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த எண்ணிக்கை 3187 எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த 2020 பாராளுமன்றத் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களின் எண்ணிக்கை 47,430 ஆகும். உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 22, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
Comments
Post a Comment