2 மில்லியன் முட்டைகள் நாளை இறக்குமதி............

 2 மில்லியன் முட்டைகள் நாளை இறக்குமதி............

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் முதல் தொகுதி முட்டை இந்த வார இறுதியில் நாட்டை வந்தடைய உள்ளது.

இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனம் குறித்த முட்டை தொகையை இறக்குமதி செய்யவுள்ளது. முதன்முறையாக இந்தியாவில் இருந்து சுமார் இரண்டு மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, குறித்த முட்டை தொகை இந்தியாவில் இருந்து நாளை இலங்கைக்கு இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதேவேளை, முட்டை இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தக வரியில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நிதியமைச்சினால் விதிக்கப்பட்ட முட்டை ஒன்றிற்கு 50 ரூபாவாக இருந்த விசேடவர்த்தக வரியை பெப்ரவரி 21ஆம் திகதி முதல் 1 ரூபாவாக குறைத்துள்ளது.

குறித்த வரித் திருத்தம் மூன்று மாத காலத்திற்கு செல்லுபடியாகும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

Comments