இலங்கை கிரிக்கெட் தேர்தல் மே மாதம் 20 ஆம் திகதி.....
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ தேர்தல் எதிர்வரும் மே மாதம் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
2023 - 2025 காலகட்டத்திற்கு அங்கு புதிய அதிகாரிகள் குழு நியமிக்கப்பட உள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபை தேர்தலுக்கான வேட்புமனுக்களை மூவரடங்கிய தேர்தல் குழு (27) ஏற்றுக்கொண்டதாக இலங்கை கிரிக்கெட் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் நவம்பர் மாதம் 23 ஆம் திகதி நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் செயற்குழு கூட்டத்தில் கிரிக்கெட் தெரிவுக்குழுவிற்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மாலானி குணரத்ன, ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி ஷிரோமி பெரேரா, இலங்கை நிர்வாக சேவையின் ஓய்வுபெற்ற சிரேஷ்ட சிவில் ஊழியர் சுனில் சிறிசேன ஆகியோர் இந்த மூவரடங்கிய தெரிவுக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
அதன்படி (27) காலை 9.30 மணிக்கு கிரிக்கெட் அலுவலக தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு மாலை 3.30 மணியுடன் நிறைவடைந்தது.
Comments
Post a Comment