மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்தின் சாரணிய ஸ்தாபக தினம் - 2023......

 மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்தின் சாரணிய ஸ்தாபக தினம் - 2023......

மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்தின் சாரணிய ஸ்தாபக தினமானது பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்தின் அதிபரும் சாரண சங்க மாவட்ட உதவி ஆணையாளர் ஏ.புட்கரன் தலைமையில் பாடசாலை வளாகத்தில் (22) திகதி இடம் பெற்றது.
அதிபரினால் பேடன் பவுல் பிரபுவின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மரியாதையும் செலுத்தப்பட்டது.
வாழ்க்கையில் பாடசாலைக் கல்விக்கு வழங்கப்படுவது போன்ற அந்தஸ்தை சாரணியத்துக்கும் வழங்கப்படுவதாகவும், அதனுடன் சாரணர்களுக்கு சாரணியத்தின் பெருமையையும் எடுத்து கூறப்பட்டன.
இந்நிகழ்வில் பட்டிருப்பு கல்வி வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சுரேஷ் மற்றும் சாரணிய தலைவர்களும், கனிஷ்ட சிரேஸ்ட, திரி சாரணர்களும் பங்கு பற்றியதுடன் பாடசாலை வளாகத்தில் சிரமதானம் இடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.



Comments